காத்தான்குடி: காத்தான்குடி நகர சபை பொதுநூலகம் பாடசாலை மாணவர்கள் மற்றும் வாசகர்களின் நலன்கருதி ‘நெசனல’ திட்டத்துடன் இணைந்து இணையதள சேவையொன்றை காத்தான்குடி பொதுநூலகத்தில் ஆரம்பித்துள்ளாக காத்தான்குடி பொது நூலக உதவியாளர் எஸ்.எல்.எம்.முபாறக் தெரிவித்தார்.
நூலகம் இயங்கும் எந்நேரத்திலும் குறித்த இணையத்தள சேவையை பெற்றுக்கொள்ளலாம் எனவும் இதற்காக மிகக்குறைந்த கட்டணம் அறவிடப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
காத்தான்குடி பொதுநூலகம் மாணவர்களின் நன்மைகருதி அவர்களுக்கு தேவையான கல்வி சம்பந்தப்பட்ட அல்லது தொழிநுட்ப அறிவு என்பவற்றை இணையத்தினூடாக பெற்றுக் கொள்வதற்காகவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a comment