திருமலை துறைமுகத்தில் ரஷ்ய போர்க்கப்பல்!

russiaதிருகோணமலை: ரஷ்ய போர்க்கப்பல் ஒன்றும் வர்த்தக கப்பலொன்றும் தற்சமயம்  திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இரு நாடுகளின் கடற்படை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்வதுடன் நல்லுறவை மேம்படுத்துவது இக்கப்பல்களின் வருகையின் நோக்கமாகும். அண்மைக்காலங்களில் ரஷ்ய கப்பல் இலங்கையை வந்தது இதுவே முதல் தடவையாகும்.

ரஷ்ய கப்பல்களை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.அனைத்து யுத்த வசதிகளையும் கொண்ட அந்த போர்க்கப்பல் 187 மீட்டர் நீளமுடையது. அதிகாரிகள் உட்பட 529 பேர் அக்கப்பலில் சேவையாற்றுகின்றனர்.

யுத்தக்கப்பலுக்கு உதவி வழங்கும் வர்த்கக் கப்பலின் நீளம் 162 மீட்டர் நீளமுடையது. சுமார் 72 பேர் அதில் பணியாற்றுகின்றனர். இக்கப்பல்கள் நாளை (08) வரை துறைமுகத்தில் தங்கியிருக்ககும்.

Published by

Leave a comment