ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் பதவிப்பிரமாணம்!

CV-HE.Lead[1]கொழும்பு: வட மாகாணத்தின் முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் சீ.வி விக்னேஸ்வரன் சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான ஆர் சம்பந்தன் எம் ஏ.சுமந்திரன் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, ரவூப் ஹக்கீம்,டலஸ் அழகப்பெரும டக்லஸ் தேவானந்தா ,வாசுதேவ நாணயக்கார ,டியூ குணசேகர ,திஸ்ஸ விதாரண  ,வட மேல் மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி  ,வினாயக மூர்த்தி முரளீதரன்  பாராளுமன்ற உறுப்பினர்களான பீ.திகாம்பரம், பிரபா கணேசன் ,ஜோன் அமரதுங்க ,ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட உறுப்பினர்கள் விக்னேஸ்வரனின் குடும்பத்தினர் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துக்  கொண்ட அமைச்சர்கள் அனைவரும், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

CV-HE.Lead[1]

Published by

Leave a comment