குதிரையை முத்தமிட்ட மனைவியை விவாகரத்து செய்த கனவன்!

Arabian-Horse-drawing-22114114-1368-1360[1]ரியாத்: சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரு குதிரைக்கு முத்தமிடும் போட்டோ வெளியானதை அடுத்து, அந்தப் பெண்ணை விகாகரத்து செய்துள்ளார் சவுதி கணவர். தமது மனைவியை குதிரையை முத்தமிட்ட போட்டோவை சமூக வலைத்தளத்தில் கண்ணுற்ற கணவரே, கதிகலங்கி விவாகரத்து வரை போய்விட்டார்.

பெயர் வெளியிடப்படாத இந்தப் பெண், பிராணிகளில் அன்பு கொண்டவர் என தெரிவித்துள்ள சாடா பத்திரிகை, விவாகரத்து குறித்து அந்தப் பெண் கவலைப்படவில்லை என செய்தி வெளியிட்டுள்ளது.

ரியாத் நகர் அருகேயுள்ள பண்ணை ஒன்றுக்கு சென்ற இந்தப் பெண், அங்கு நின்றிருந்த குதிரை ஒன்றுடன் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பினார். குதிரைக்கு அருகே சென்று தட்டிக் கொடுத்து முத்தமிட்டு போட்டோ எடுத்துக் கொண்டார்.

அதை தமது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டும் விட்டார். இந்த போட்டோவை பார்த்த கணவர், உடனடியாக அந்த பெண்ணை தலாக் (விவாகரத்து) செய்து விட்டார். இது குறித்து மேலும் தகவல் வெளியிட்டுள்ள சாடா பத்திரிகை, “அந்தப் பெண், தமது நடவடிக்கை குறித்து வருத்தம் தெரிவிக்க தயாராக இல்லை.

மனிதர்களுக்கும், பிராணிகளுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை அறிந்திராத கணவர் விவாகரத்து செய்தது குறித்து தாம் கவலைப்பட போவதில்லை என தெரிவித்த அந்தப் பெண், அரேபியக் குதிரை மீது உள்ள எனது அன்பை அந்த போட்டோ மூலம் வெளிப்படுத்தியதில் பெருமையடைகிறேன் எனவும் கூறினார்” என அப்பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.

Published by

Leave a comment