பரீட்சையில் புள்ளி குறைந்தமையால் மகனை தீயினால் சுட்ட தந்தை

boyபொகவந்தலாவை: நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையில் குறைந்த புள்ளியை பெற்ற தனது மகனை தீயினால் சுட்ட தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர் பொகவந்தலாவை கீழ் பிரிவு தோட்டத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையி;ல் 95 புள்ளிகளை பெற்றதன் காரணமாக புள்ளிகள் பற்றாது எனகூறியே தனது 10வயது மகனை அவரது தந்தை தீயினால் சூடு வைத்துள்ளார்.

பொகவந்தலாவ பொலிசாருக்கு கிடைத்த தகவலின் படி சம்பவம் தொடர்பாக குறித்த சிறுவனின் தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுவனுக்கு கழுத்துப்பகுதியிலும் வலது காலிலும் எறி காயங்களுடன் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பொகவந்தலாவ பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

bogawanthalawaasfasf

Published by

Leave a comment