கொழும்பு: அடுத்த தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் மேல் மாகாண சபை கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட உள்ளதாக ஐ.ம.சு.மு. செயலாளர் நாயகம் சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்தார். மேல் மாகாண சபையின் பதவிக் காலம் 2014 ஏப்ரலில் நிறைவடைய உள்ளது.
அதற்கு முன்னர் மேல் மாகாண சபைத் தேர்தலை நடத்த இருப்பதாக கூறிய அமைச்சர் தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பதவிக்காலங்கள் அதன் பின்னர் முடிவடைய இருப்பதாகவும் அவர் கூறினார்.
மாகாண முதலமைச்சர்கள் விரும்பினால் அந்த மாகாணசபைகளும் முன்கூட்டி கலைத்து தேர்தல் நடத்தப்படும் என்றார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகமாநாட்டிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
Leave a comment