முன்னாள் முதல்வர் சந்திரகாந்தனினால் முறக்கொட்டாஞ்சேனை மீன்பிடி சங்கத்திற்கு 3 இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு

fhisher_1[1]– பழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் மூலம் முறக்கொட்டாஞ்சேனை மீன்பிடி சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முறக்கொட்டான் சேனை மீனவர் சங்க கட்டிடத்தில்  முறக்கொட்டாஞ்சேனை மீனவர் அமைப்பின் மீனவர் சங்கத்தின் தலைவர் மயில்வாகனம் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண மீன்பிடி பணிப்பாளர் எஸ்.சுதாகரன், மாவட்ட உத்தியோகஸ்த்தர் மற்றும் முறக்கொட்டாஞ்சேனை மாரியம்மன் ஆலயத்தின் தலைவர் மற்றும் மீனவர் சங்கப் பிரதிநிகள் ஊர் மக்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

இதன்போது 34 மீணவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதற்காக சுமார் 3 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

fhisher_1[1]

fhisher_8[1]

Published by

Leave a comment