மட்டு மாவட்டத்தில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இடைநீக்கம் – உதவிப் பணிப்பாளர் நைறூஸ்

naisarபழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனை உதவிப்பணிப்பாளர் எம்.எல்.எம்.நைறூஸ் தெரிவித்தார். 

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டு மாவட்ட ஊடகவியலாளர்களுடனான வருடாந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இளைஞர் பாராளுமன்ற இரு அமர்வுகளுக்கு சமூகமளிக்கவில்லை என்ற காரணத்தினாலேயே இவர்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு மற்றும், வெல்லாவெளி, காத்தான்குடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மூன்று இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுமே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் அவர்களின் வெற்றிடத்திற்கு எதிர் வரும் டிசம்பர் மாதம் இடைக்கால இளைஞர் பாராளுமன்ற தேர்தலை நடாத்தி புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.

ஒரு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் இரண்டு அமர்வுகளுக்கு சமூகமளிக்காவிடில் தமது உறுப்புரிமையை தாமாகவே இழந்து விடுவார்; என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment