அன்புடையீர் ,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
அல்குர்ஆன், அஸ்ஸுன்னா அடிப்படையில் அமைந்த ஸலபுகளான முன் சென்ற அறிஞர்களின் வழிமுறையைக் கொண்ட ஆலிமாக்களையும் அதன் தாக்கத்தை பெண்கள் சமூகத்தில் எதிரொலிக்கச் செய்யும் தாயியாக்களையும், உருவாக்கும் நன்நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக்கல்லூரிக்கு புதிய மாணவிகள் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
சேர்வுத் தகைமைகள்:
1. அல்குர்ஆனை அழகாக ஓதத்தெரிந்திருத்தல்.
2. ‘ஷரீஆ’ கற்கை நெறியை தொடர்வதற்கு ஆர்வமுள்ளவராக இருத்தல்.
3. 2014ம் ஆண்டில் தரம் 07ல் கல்வி கற்பவராக இருத்தல்.
4. எழுத்துப் பரீட்சையிலும் நேர்முகப் பரீட்சையிலும் தேர்வு பெறல்.
மேற்படி கல்லூரியில் தங்களது பிள்ளைகளை சேர்த்துக் கொள்ள விரும்புவோர், வெள்ளி தவிர்ந்த ஏனைய தினங்களில் மாலை 06.30 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை புதிய காத்தான்குடி பதுரியா வித்தியாலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள எமது அலுவலகத்தில் ரூபா 100/- செலுத்தி விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்து இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 05.11.2013ம் திகதிற்கு முன்னர் நேரடியாக ஒப்படைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
மேலதிக தொடர்புகளுக்கு :
0652248403 / 0779918586

Leave a comment