காங்கேயனோடை: பொருளாதார அபிவிருத்தியமைச்சின் கீழ் திவிநெகும திட்டத்தினூடாக கிராமமெங்கும் மரநடுகை வேலைத்திட்டத்தினூடாக திவிநெகும திட்டத்தின் காங்கேயனோடை பிரதேசத்திற்கான மரநடுகை வேலைத்திட்டம் பொருளாதார அபிவிருத்த பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகுழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வினால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
பிரதேச பொருளாதார அபிவிருத்தியமைச்சின் மீழ் எழுச்சித்திட்டத்தின் காரியாலய பொறுப்பாளர் முகம்மட் தாஹா தலைமையில் இடம்பெற்றது. இவ்வைபவத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இம்மரநடுகை வேலைத்திட்டத்தினை காங்கயனோடை பிரதான வீதியில் நட்டு அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இவ்வைபவத்தில் இலங்கை மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment