உலக சாதனைக்குரிய அந்த ஓவர்….

alaudin_001[1]டாக்கா: கிரிக்கெட்டில் வீரர்கள் எத்தனையோ சாதனைகள் படைத்துவரும் நிலையில் அலாவுதீன் என்ற வங்கதேச வீரர் அதிக ஓட்டங்கள் கொடுத்து மோசமான புதிய உலக சாதனை படைத்துள்ளார். டாக்காவில் நடந்த கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஒரே ஓவரில் 39 ஓட்டங்களைக் கொடுத்து பெரும் டென்ஷனாக காணப்படுகிறார் இந்த பந்துவீச்சாளர்.

ஷேக் ஜமால் தான்மோன்டி என்ற கிளப்புக்கெதிரான போட்டியின்போது தான் இந்த புதிய உலக சாதனையை அவர் படைத்தார்.

ஷேக் அணியி்ன் சார்பில் ஆடிய ஜிம்பாப்வே முன்னாள் அணித்தலைவர் எல்டன் சிகும்பராதான், அலாவுதீனை நொந்து போக வைத்தவர். அலாவுதீன் வீசிய அந்த ஓவரில் மட்டும் 39 ஓட்டங்களை வெளுத்தார் சிகும்பரா.

முதல் பந்திலேயே ஒரு பவுண்டரியை அடித்தார் சிகும்பரா. பந்து நோல் பால் ஆனதால் முதல் பந்திலேயே ஐந்து ஓட்டங்கள் கிடைத்தன. அடுத்து ஒரு வைடு போட்டார் அலாவுதீன். பின்னர் அடுத்த நான்கு பந்துகளில் 6, 4, 6, 4, 6 என்று மாறி மாறி நையப்புடைத்தார் சிகும்பரா.

பிறகு இன்னொரு வைடு போட்டார் அலாவுதீன். கடைசிப் பந்தில் சிக்ஸ் அடிக்க அலாவுதீன் வெக்ஸ் ஆகி விட்டார்.

மொத்தம் இந்த ஒரு ஓவரில் 39 ஓட்டங்களைக் குவித்து விட்டது ஷேக் அணி. உலக அளவில் லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஓவரில் இத்தனை ஓட்டங்களை ஒரு பந்து வீச்சாளர் விட்டுக் கொடுத்தது இதுவே முதல் முறையாகும் என்பதால் இது உலக சாதனையாக மாறி விட்டது. LS

alaudin_001[1]

Published by

Leave a comment