ஆந்திரா பிரிகிறது- இந்தியாவின் 29வது மாநிலமாக தெலுங்கானா பிறக்கிறது!

india– SHM

டெல்லி: ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. 10 வருடங்களுக்கு ஹைதராபாத் நகரம், இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தெலுங்கானா தனி மாநிலத்திற்கான முதல் முக்கிய நடவடிக்கையாக இது எடுக்கப்பட்டது.

இந்தியாவின் 29வது மாநிலமாக தெலுங்கானா பிறக்கிறது. பத்து மாவட்டங்கள் இந்த மாநிலத்தில் இடம் பெற்றிருக்கும்.

அமைச்சர்கள் குழு அமைப்பு அடுத்து தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பான பணிகளைக் கவனிக்க அமைச்சர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும் என்று மத்தியஉள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

ஷிண்டே மேலும் கூறுகையில், புதிய தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றார். 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்தக் கூட்டம் நடந்தது.

ஹைதராபாத், இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக பத்து வருடங்களுக்கு நீடிக்கும்.

தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டதும், கடலோர ஆந்திரா, ரயலசீமா, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் அடிப்படை உரிமைகள் நலன்கள் பாதுகாக்கப்படும் என்றார் ஷிண்டே.

தெலுங்கானா மாநிலத்தில் 10 மாவட்டங்களும், ஆந்திராவில் 13 மாவட்டங்களும் இனிமேல் இருக்கும்.

india

Published by

Leave a comment