தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று சித்தி எய்துள்ள மாணவர்களுக்கு காத்தான்குடி OSA அமைப்பின் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்

ILMY AHAMED LEBBEபழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: வெளிவந்துள்ள தரம்5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று சித்தி எய்துள்ள மாணவர்களுக்கும் குறிப்பாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய காத்தான்குடி கோட்ட மாணவர்களுக்கும் இதயம் கனிந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம் எல்லாப்புகளும் இறைவனுக்கே. இவ்வாறு சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் முதல்வரும், சமூக சேவையாளருமான இல்மி அஹமட் லெவ்வை தெரிவித்தார்.

விஸேடமாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயதிற்குட்பட்ட காத்தான்குடி கோட்டத்தில் 190 உச்ச புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும் மாவட்ட மட்டத்தில் 4ம் இடத்தினையும் அடைந்து காத்தான்குடியினை பிராந்தியம் முழுவதும் பேசச் செய்த மில்லத் மகளிர் மஹா வித்தியாலய மாணவி செல்வி அப்துல் மஜீட் பாத்திமா மம்தூஹாவுக்கு எமது உள்ளம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அத்தோடு கோட்டத்தில் மீரா பாலிகா மஹாவித்தியாலய மாணவர்கள் 39 பேர் சித்தி எய்துள்ளார்கள் அவர்களுக்கும் பல்வேறுபட்ட அர்பணிப்புக்களுடன் கற்பித்த ஆசிரிய ஆசரியர்களுக்கும் அதிபர்களுக்கும் எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஏழை மாணவர்களின் கல்வி எழுட்ச்சிக்காக பல்வேறு ஊக்குவிப்புக்களை நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற வலித்துதவும் அமைப்பு என்ற அடிப்படையில் இது எமக்கு பெரும் மகிழ்ச்சியினையும் மன நிறைவையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய சித்தி எய்த மற்றும் சிறிய புள்ளி வித்தியாசத்தில் சித்தியடையாது தவிக்கும் சிறார்களுக்கும் அவர்களது கல்வி மேம்பாட்டுக்காக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.என்று இல்மி அஹமட் லெவ்வை மேலும் தெரிவித்தார்.

Published by

Leave a comment