செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் மண் அகழ்வு தொடர்பில் புதிய தீர்மானம்

sandminigmeeting_1பழுளுல்லாஹ் பர்ஹான்

செங்கலடி: செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மண்அகழ்வாளர்களுடான முக்கிய கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை ஏறாவூர்பற்று உதவி பிரதேச செயலாளர் திருமதி ந.முகுந்தன் தலைமையில் இடம்பெற்றது.

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,சீ,யோகேஸ்வரன், புவிச்சரிதவியல் சுரங்கப் பணியகத்தின் பொறியியலாளர் எம்.பாரிஸ் மற்றும் மாவட்டசெயலகத்தின் பிரதம கணக்காளர் நேசராஜா உட்பட மண் அகழ்வு பத்திர உரிமையாளர்களும் கலந்து கொண்டார்கள்

செங்கலடி பிரதேச செயலாளர் பரிவிற்குட்பட் அங்கிகரிக்கப்பட்ட பிரதேசங்களில் மண்அகழும் போது எதிர்நோக்கப்படுகன்ற பிரச்சினைகள் மற்றும் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள்

புதிய பல தீர்மானங்கள் கிரான்புல்கட்டுப் பிரதேசத்தில் மண்அகழ்வதற்கான அனுமதி தடைசெய்யப்பட்டுள்ளது, மண் அகழ்வாளர்களால் வருடார்ந்தம் இரு போகத்தின்போதும்(காலபோகம், மும்மாரி) அறுவடைக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் மண் ஏற்றிச் செல்கின்ற பிரதான பாதைகள் புணரமைத்து கொடுக்கப்படும் (இதனை புவிச்சரிதவியல் சுரங்கப் பணியகத்தின் பொறியியலாளர் எம். பாரிஸ் அவர்களே முன்னின்று செய்து தருவதாக உறுதியளித்தார்), எதிர்காலத்தில் அப்பாதைகள் அனைத்தையும் அரச நிதியைக் கொண்டு முழுமையாக நிரந்தரமாக சீர் செய்து செப்பனிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் (தாம் மேற்கொள்வதாக முன்னால் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் மற்றும் கச்சேரியின் பிரதிநிதியான பிரதம கணக்காளர் நேசராஜா ஆகியோர் பொறுப்பெடுத்தார்கள்) உள்ளிட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டுள்ளன. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment