லம்பெடுசா: வட ஆபிரிக்காவில் இருந்து 463 பேருடன் இத்தாலி நோக்கி சென்ற கப்பல் நடுக்கடலில் மூழ்கியதில் 100க்கும் அதிகமானோர் பலியாகி இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.வட ஆப்பிரிக்காவில் இருந்து 463 பேருடன் கப்பல் இன்று புறப்பட்டது. இவர்கள் அனைவரும் இத்தாலிக்கு அகதிகளாக குடியேறச் சென்றவர்கள்.
இந்தக் கப்பல் துனிசியாவின் கடற்பரப்பைக் கடந்து தெற்கு இத்தாலியில் உள்ள தீவான லம்பெடுசா நோக்கி சென்று கொண்டிருந்த போது கடலில் மூழ்கியது. இதைத் தொடர்ந்து மீட்புப் பணிகளை இத்தாலி கடற்படை மேற்கொண்டது. 150 பேர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். 85 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.



Leave a comment