காத்தான்குடி: காத்தான்குடி அல்-அமீன் வித்தியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற உலக சிறுவர் தின நிகழ்வில் அல்-அமீன் வித்தியாலய மாணவர்களின் கல்விக்காக சேவையாற்றிய காத்தான்குடி அல்-அமீன் வித்தியாலய ஸ்தாபகரும், முன்னாள் வித்தியாலய அதிபருமான அல்ஹாஜ் எம்.ஏ.செய்யித் முஹம்மத் ஜேபி மற்றும் வித்தியாலயத்தின் வளர்ச்சிக்காக தற்போது சேவையாற்றிவரும் பிரமுகர்கள் நால்வர் உட்பட ஜந்து பேர் பாடசாலை நிர்வாகத்தினால் பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் வைத்து கௌரவிக்கப்பட்டனர்.
இவர்களுக்கான நினைவுச்சின்னம் அல்-அமீன் வித்தியாலய அதிபர் எம்.எம்.கலாவூதீன்,பிரதி அதிபர் யாஸீர் அறபாத், அல்-அமீன் வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் டின் பைரூஸ் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் அல்-அமீன் வித்தியாலய ஸ்தாபகரும், முன்னாள் வித்தியாலய அதிபருமான அல்ஹாஜ் எம்.ஏ.செய்யித் முஹம்மத் ஜேபிக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டதோடு அடுத்த நான்கு பிரமுகர்களான மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.அமீர், காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் சுபைர்,காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினரும்,நூரி புத்தக நிலைய உரிமையாளருமான ஏ.எல்.எம்.சலீம் ,யுனிசெப் நிறுவனத்தின் பிரதிநிதி நிபால் அலாவூதீன் ஆகியோருக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்ட்டது.
![DSC00690[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/dsc006901.jpg?w=150&h=112)
![DSC00690[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/dsc006901.jpg?w=780&h=585)
![DSC00754[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/dsc007541.jpg?w=780&h=585)


Leave a comment