போரதீவு: முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிரத்தியேக நிதி ஓதுக்கீட்டின் மூலம் போரதீவுப்பற்று உதயதாரகை விளையாட்டு கழகத்திற்கு 75ஆயிரம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் போரதீவு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
இதன்போது முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் வில்வரெத்தினம் மற்றும் போரதீவுப்பற்று முன்னாள் தவிசாளர் வி. சிறிதரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் க.யோகவேள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உதய தாரகை விளையாட்டுக் கழக உறுப்பினர்களிடம் விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

Leave a comment