பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலை மற்றும் பிஸ்மி கின்டர்கார்டன் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச சிறுவர் தின நிகழ்வு

DSC_0399பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மட்டு-காத்தான்குடி பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலை மற்றும் பிஸ்மி கின்டர்கார்டன் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச சிறுவர் தின நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலை உறுப்பினர் அஷ்ஷேய்க் அஸ்ஹர் நளீமி தலைமையில் இடம்பெற்றது.

இங்கு இஸ்லாமிய கலாசாரத்தை பேனும் சிறுவர் சிறுமிகளின் ஆற்றல்களை பிரிதிபலிக்கும் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றபட்டதோடு இவ் சிறுவர் தின நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து சிறுவர் சிறுமிகளுக்கும் இனிப்பு பண்டங்கள் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் பதில் தவிசாளர் ஜெஸீம், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் நஸீர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடி நகர சபை பெண் உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸா, கா-குடி சாவியா வித்தியாலய ஆசிரியர் அமீர் அலி, காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் விரிவுரையாளர் மௌலவி எம்.பி.எம்.பாஹிம் (பலாஹி) மற்றும் பிஸ்மி அல்குர் ஆன் பாடசாலை நிர்வாகிகள் பொது மக்கள்,பெற்றோர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment