காத்தான்குடி: காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு விசேட தேவையுடைய முதியோருக்கு அவர்களது மேம்பாட்டுக்காக பல்வேறு உதவிகளை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெவ்வையினால் சுயதொழில் முயற்சிக்காக முதியோருக்கு முற்சக்கர சைக்கிள் கையளித்து வைக்கப்பட்டது.
அத்துடன் பல்வேறு துன்ப துயரங்களோடு வீடுகளிலும் முதியோர் பராமரிப்பு இல்லங்களிலும் மனம் நொந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற நமது சிரேஸ்ட பிரஜைகளின் வாழ்வில் சுபீட்சம் மலர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் என்றும் இல்மி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெவ்வை குறிப்பிட்டார்.
![P1010523[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/p10105231.jpg?w=150&h=112)
![P1010523[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/p10105231.jpg?w=780&h=585)
Leave a comment