மட்டக்களப்பு: வெளியாகியுள்ள தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் 404 பரீட்சார்த்திகள் சித்தியடைந்துள்ளதாக காத்தான்குடி கல்விக் கோட்டத்தின் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எம்.எம்.சுபைர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டங்களான காத்தான்குடிக் கோட்டத்தில் 174பேரும், ஏறாவூர் கோட்டத்தில் 77 பேரும், கோட்டத்தில் 153 பேரும் மொத்தமாக 404 பேர் இப்பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதில் காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் மில்லத் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி மாவட்ட மட்டத்தில் 4ஆம் இடத்தையும் ஏறாவூர் கோட்டத்தில் றகுமானியா வித்தியாலத்தைச் சேர்ந்த பரீட்சார்த்தி மாவட்ட மட்டத்தில் 2ஆம் இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a comment