புலமைப்பரிசில் பரிட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பாராட்டு

hizbullah– முகம்மட் சஜி

மட்டக்களப்பு: அண்மையில் நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் நாடளாவிய ரீதியில் தோற்றி சித்திபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாக் பிரதியமைச்சர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

 நாடளாவிய ரீதியில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இப் பரிட்சைக்குத் தோற்றி சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவ மாணவிகளுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன் குறிப்பாக நமது மட்டக்களப்பு மத்தி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இம்முறை நடைபெற்று முடிந்த புலமைப்பரிசில் பரிட்சையில் அதிசிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கும் சித்திபெற்ற மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்வதுடன் குறிப்பாக சித்திபெற தவறிய மாணவர்கள் தாங்கள் அச்சம் கொள்ளாது இனிவரும் காலங்களில் ஏனைய பரிட்சைகளுக்கு தோற்றி அதில் சித்திபெறுவதற்கு வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்வதுடன் இனிவரும் காலங்களில் பரிட்சைகளுக்கு தோற்றுகின்றபோது முன்ஆயத்தங்களை மேற்கொன்டு  பரிட்சைகளுக்கு தோற்றவேண்டும் எனவும் பரிட்சையில் சித்திபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கௌ;வதாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லாஹ் புலமைப்பரிசில் பரிட்சை வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

Published by

Leave a comment