காத்தான்குடி அல்-அமீன் பாடசாலை அலுவலக முன்றலுக்கு பொருத்துக்கல் பொருத்தியதை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வும் பாடசாலைக்கு கதிரை,மேசை கையளிக்கும் நிகழ்வும்

DSC00575[1]– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி அல்-அமீன் வித்தியாலயத்தில் பாடசாலை முழு ஆசிரியர்களின் 85000 ரூபாய் பங்களிப்புடன் பாடசாலை அலுவலக முன்றலுக்கு பொருத்துக்கல் பொருத்தியதை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வும் ,பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் அனுசரனையுடன் பெற்றோர்களின் 65000 ரூபாய் பங்களிப்புடன் பாடசாலைக்கு கதிரை,மேசை கையளிக்கும் நிகழ்வும் 01-10-2013 இன்று திங்கட்கிழமை பாடசாலை அதிபர் எம்.எம்.கலாவூதீன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது நிகழ்வின் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.அமீர் பாடசாலை அலுவலக முன்றலுக்கு பொருத்துக்கல் பொருத்தியதை உத்தியோகபூர்வமாக நாடாவை வெட்டி திறந்து வைத்ததோடு பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் அனுசரனையுடன் பெற்றோர்;களின் பங்களிப்புடன் வழங்கி வைக்கப்பட்ட 65000ரூபாய் பெறுமதியான 15 கதிரையையும் 15 மேசையையும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினால் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.அமீர்,காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் சுபைர் மற்றும் பாடசாலை உப  அதிபர் யாஸீர் அறபாத், காத்தான்குடி அல்-அமீன் வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் டின் பைரூஸ், புதிய காத்தான்குடி முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயல் தலைவர் கே.எல்.அப்துற் றஹீம்; மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

DSC00582[1]

???????????????????????????????

DSC00575[1]

Published by

Leave a comment