கொழும்பு: பச்சை அட்டை அதிஷ்ட குழுக்கல் (Green Card Lottery) என்று அழைக்கப்படும் 2015 அதிஷ்ட குலுக்கல் மூலம் பல்வகைமை குடியேற்ற வீசா நிகழ்ச்சித்திட்டம், ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்க இராச்சிய தூதுவராலயம் அறிவித்துள்ளது.பச்சை அட்டை அதிஷ்ட குழுக்கல் சீட்டு தொடர்பில் கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்க இராச்சிய தூதுவராலயம் வெளியிட்டுள்ள அறிக்கை,
2013 ஒக்டோபர் 01 ஆம் திகதி இலங்கை நேரம் பிற்பகல் 09.30 மணி முதல், 2013 நவம்பர் 02 ஆம் திகதி பிற்பகல் 09.30 மணி வரை மேற்படி நிகழ்ச்சித்திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் இணைய தளத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும்.
அதிர்ஷ்ட குலுக்கல் மூலம் பல்வகைமை குடியேற்ற வீசா வழங்கும் வருடாந்த நிகழ்ச்சித்திட்டம் இலங்கை, மாலை தீவுகள் உட்பட தகைமை வாய்ந்த நாடுகளில் பிறந்தோருக்கு குடியேற்ற வீசா பெறும் வகையில நேர்காணலுக்கான ஒரு சந்தர்ப்பம் எழுந்தமானமாக வழங்கப்படுகிறது.
ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தில் சட்டபூர்வமான நிரந்தர குடிமக்களாகக் கருதப்படுவதற்கான குடிவரவு வீசாக்களுக்கு அவர்கள் தகைமை பெறுவார்கள்.
இந்த நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக, சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் விபரமான ஆலோசனைகளையும், தகைமைகளையும் கண்டறிவதற்கு ஆர்வம் கொண்டுள்ளீர்களாயின் தயவு செய்து கொழும்பு அமெரிக்க தூதுவராலயத்தின்
அதிர்ஷ்டக் குலுக்கலுக்கு விண்ணப்பிப்பதாயின் தயவுசெய்து www.dvlottery.state.gov இணைய தளத்தைப் பார்வையிடவும்.
ஆலோசனைகள் :-
2013 ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் நவம்பர் 02 ஆந் திகதி வரையிலான கால எல்லையில் அதிஷ்டக் குலுக்கலுக்கான விண்ணப்பப் படிவம் ஏற்றுக்கொள்ளப்படும்.
* இலங்கை மாலை தீவுகள் உட்பட ஒரு சில நாடுகளில் பிறந்தோருக்கு மாத்திரமே அதிஷ்டக் குலுக்கல் செல்லுபடியாகும்.
* ஒருமுறை மாத்திரமே நீங்கள் விண்ணப்பிக்க முடியும். பலமுறை விண்ணப்பித்தால் அதன் பெறுபேறாகத் தகைமையை இழக்க நேரிடும்.
* பல்வகைமை வீசாவிற்குத் தேவையான தகைமைகளான கல்வித் தகைமையையும், தொழில் அனுபவத் தகைமையையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
எனவே, விண்ணப்பிப்பதற்கு முன்னர் உங்களுக்குத் தேவையான தகைமைகளையிட்டு நிச்சயித்துக் கொள்ளுங்கள்.
* இணைய தளத்தில் உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர், அதற்கான உறுதிப்படுத்தப்பட்ட இலக்கம் வழங்கப்படும். நீங்கள் வீசா நேர்காணலுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்களா என இந்த இலக்கத்தைக் கொண்டே பரிசீலனை செய்து பார்க்க முடியும்.
எனவே, இவ்விலக்கத்தைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இணைய தளத்திற்கான விண்ணப்பம் முற்றிலும் இலவசமானது. எதுவித மறைமுகமான செலவுகளும் கிடையாது.
ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டவர்கள் எனத் தம்மை அறிமுகப்படுத்தும் போலித் தனிநபர்களுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ ஏமாற வேண்டாம்.
தெரிவு செய்யப்படுவது தொடர்பில் முன்வைக்கப்படும் போலி உறுதிமொழிகளை நம்ப வேண்டாம். விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்வதற்கும் சமர்ப்பிப்பதற்கும் 3 ஆம் தரப்பினருடைய உதவி தேவையில்லை.
அடுத்த நடவடிக்கை தொடர்பான அறிவித்தல்கள்
2014 மே மாத ஆரம்பத்தில் விண்ணப்பதாரிகள் http://www.dvlottery.state.gov என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு வீசாவிற்கான நேர்காணலுக்கு நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்களா என பரிசலீக்க முடியும்.
நீங்கள் தெரிவு செய்யப்பட்டு இருப்பின் ஐக்கிய அமெரிக்கப் பேராளர் அதிகாரியோடு (U.S.Consular Officer) ஒரு நேர்காணல் இடம்பெறும். நீங்கள் வீசாவைப் பெறத் தகுதி பெற்றுள்ளீர்களா என அவரே தீர்மானிப்பார். CM
Leave a comment