வெளிநாட்டு தூதரகங்களை உளவு பார்த்த சமந்தா

white_widow_002[1]நைரோபி: கென்யாவில் நடந்த தாக்குதலில் பிண்ணனியாக இருக்கக்கூடும் என கருதப்பட்ட வயிட் விடோ சமந்தா தென் ஆப்ரிக்க தலைநகரில் வெளிநாட்டு தூதரகங்களை நோட்டமிட்டது தற்போது தெரியவந்துள்ளது. கென்யாவின் நைரோபியில் உள்ள மாலில் அல் ஷபாப் தீவிரவாதிகள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் 67 பேர் பலியாயினர்.

இந்த தாக்குதலுக்கு அல்கொய்தாவை சேர்ந்த விதவைப் பெண்ணான சமந்தா லூத்வெய்ட்(வயது 29) காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது.

இதற்கிடையே அவருக்கு எதிராக இன்டர்போல் கடந்த வாரம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் சமந்தா இந்த ஆண்டின் தொடக்கத்தில் போலி பாஸ்போர்ட்டில் தென் ஆப்பிரிக்கா சென்றது தெரிய வந்துள்ளது.

மேலும் ப்ரிடோரியாவின் ஆர்கேடியா பகுதியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் உள்ளிட்ட தூதரகங்களை நோட்டமிட்டது தெரிய வந்துள்ளது.

சமந்தா குறித்து இஸ்ரேல் உளவு நிறுவனமான மொசாட் தென்னாப்பிரிக்க யூத சங்கத்தை எச்சரித்துள்து.

மேலும் தென்னாப்பிரிக்க போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் தான் சமந்தாவை கண்டுபிடிக்க தவறிவிட்டனர்.

முன்னதாக சமந்தா கடந்த 2008ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு இடையிலான காலத்தில் நடாபி ஃபாயே வெப் என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் மூலம் தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார். இந்த வழக்கிலும் சமந்தாவை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. Ls

Published by

Leave a comment