முப்பது வருடங்களின் பின் சந்திக்கும் இரு துருவங்கள்….

IranUSAFlags[1]நியுயோர்க்: 30 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக அமெரிக்கா- ஈரான் ஜனாதிபதிகளிடையே தொலைபேசி மூலமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஈரானில் 1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து உலக நாடுகள் அந்நாட்டுக்குப் பொருளாதாரத் தடைகளை விதித்தன. ஈரானின் அணுசக்தி உற்பத்தி குறித்தும் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில் தற்போது ஈரான் ஜனாதிபதியாக ஹசன் ருஹானி பதவியேற்றதைத் தொடர்ந்து நிலைமை மாறத் தொடங்கியுள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் நடைபெற்ற ஐ.நா பொதுசபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு ருஹானி தனது முதல் உரையை ஆற்றினார்.

அப்போதே ருஹானி அமெரிக்க ஜனாதிபதியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் இது சிக்கலான விஷயம் என்பதால் தவிர்க்கப்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி ஹாலன்டேயையும் அவர் சந்தித்துப் பேசினார். மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியும், ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவத் சரிபும் 6 ஆண்டுகளுக்குப் பின்னர் நேரில் சந்தித்து உரையாடினர்.

இந்நிலையில் நேற்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும், ஈரானின் ஜனாதிபதி ஹசன் ருஹானியும் தொலைபேசியில் உரையாடினர். அப்போது ஈரானின் அணுசக்தி விவகாரம் தொடர்பாக இருவரும் விவாதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது

Published by

Leave a comment