இலங்கைக்கு வருகை தந்துள்ள சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உயர்மட்ட தூதுக்குழுவினர், நீதியமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை வெள்ளிக்கிழமை (27) முற்பகல் நீதியமைச்சில் சந்தித்து உரையாடினர். அவர்கள் பிரஸ்தாப நிதியத்தின் இலங்கைக்கான நடப்பு நிதியாண்டிற்கான செயல்திட்ட யோசனைகள் பற்றியும், இங்கு ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட செயல்திட்டங்கள் பற்றியும் அமைச்சருடன் கலந்துரையாடினர். அமைச்சர் ஹக்கீம் அவர்களிடம் சில ஆலோசனைகளை முன்வைத்தார்.
சவூதி அபிவிருத்தி நிதியத்தின் ஆசியாவிற்கான செயல்திட்ட பணிப்பாளர் அப்துல்லா அல் ஷெடோக்கி, அந் நிதியத்தின் கடனுதவி அதிகாரி முஹம்மத் டரய்பி, அதன் திறைசேரி திணைக்கள உயர் அதிகாரி அப்துல் அஸீஸ் ஆகியோரே அமைச்சரை சந்தித்தனர்.
இச் சந்திப்பின் போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தௌபீக், பைசல் காசிம் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஏ.எம். ஜெமீல், மத்திய மாகாண சபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியார், வடமாகாண சபை உறுப்பினர் எச்.எம். றயீஸ், கட்சியின் பிரதித் தலைவர் யு.ரி.எம். அன்வர், உச்ச பீட உறுப்பினர் தமீம் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
![DSC_3461[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/dsc_34611.jpg?w=150&h=99)
![DSC_3461[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/dsc_34611.jpg?w=624&h=414)
![DSC_3471[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/dsc_34711.jpg?w=624&h=414)
Leave a comment