கல்முனை மாநகர முதல்வர்-துறைமுக அதிகார சபையின் தலைவர் சந்திப்பு

– FM.பர்ஹான்

kalmunaiகல்முனை:  கல்முனைமாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் டொக்டர். பிரியெந்த பி. விக்ரமவை நேற்று (26.09.2013) துறைமுக அதிகார சபை அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். ஒலுவில் மீன் பிடி துறைமுகத்தில் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட மீன் பிடி படகுகளை நிறுத்துவதில் கடந்த காலங்களில் பிரதேச மீனவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் மற்றும் கடல் கொந்தழிப்பு காலத்தில் இதனால் மீனவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

மீனவர்கள் தற்போது உபயோகப்படுத்துகின்ற சிறிய மீன் பிடி படகுகள் மாத்திரமன்றி பெரிய அளவிலான மீன் பிடி படகுகளையும் நிறுத்திவைக்க  தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

அத்தோடு ஒலுவில் துறைமுகத்தில் பிரதேச வாசிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பிலும் விரிவாக ஆரயப்பட்டது.  

kalmunai

Published by

Leave a comment