அரசாங்கத்தினால் முஸ்லிம் காங்கிரசை வெளியில் போட முடியாது-கிழக்கு மாகாணஅமைச்சர் ஹாபீஸ் நஸீர்

eravurஏறாவூர்: கிழக்கு மாகாணம் அனைத்து வழங்களும் நிறைந்த மாகாணமாகும். இந்த மாகாணத்தின் வளத்தினைப் பயன்படுத்தினால் அனைவரும் இங்கு தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ள சந்தர்பங்கள் நிறையவே உண்டு. இங்குள்ள வளங்களைப் பயன்படுத்தி தொழிலில் ஈடுபட்டால் பணிப்பெண்களாக வெளிநாடு செல்பவர்கள் அங்கு போக வேண்டிய அவசியம் கிடையாது.

எதிர் காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்கள் வெளிநாடு செல்வதை தடுப்பதற்காக மாற்றுத் தொழில் நடவடிக்கைகளை நாம் இந்த மாகாணத்தில் ஏற்படுத்த வேண்டும்.

என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண விவசாய கால் நடை அமைச்சருமான ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார் மட்டக்களப்பு ஏறாவூரிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்குகையில்

அரசாங்கத்தினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை வெளியில் போட முடியாது அடுத்த ஆண்டு (2014) ஜனாதிபதித் தேர்தல் நடைபெறக் கூடிய சாத்திகக் கூறுகள் இருக்கின்றன அந்தத் தேர்தலுக்கு முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு முக்கியமானதாகும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலில் சுமார் 53000 வாக்குகளைப் பெற்றது. ஜனாதிபத்தித் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அரசாங்கத்திற்குத் தேவையாகும். அதனால் அரசாங்கம் முஸ்லிம் காங்கிரசை வெளியில் போடாது.

இன்று இந்த நாட்டில் இனவாதம் தலை தூக்கியுள்ள நிலையில் பெரும்பான்மை சமூகம் பேரினவாத்தினை நோக்கிச் செல்கின்றன. அதனால் சிறுபான்மை சமூகங்களான தமிழ் மற்றும் முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டும்.

வட மாகாணத்தில் நடந்து முடிந்த தேர்தலின் மூலம் தமிழ் மக்களின் ஒற்றுமை பலப் படுத்தப் பட்டுள்ளது. தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகள் அரசியல் தீர்வு பற்றிப் பேசவேண்டும் அதன் மூலம் தீர்வொன்றினை எட்ட முடியும். முஸ்லிங்களைப் புறந்தள்ளி விட்டு எந்த தீர்வும் பெற்றுக் கொள்ள முடியாது.

கிழக்கு மாகாணம் அனைத்து வழங்களும் நிறைந்த மாகாணமாகும் இந்த மாகாணத்தின் வளத்தினைப் பயன்படுத்தினால் அனைவரும் இங்கு தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ள சந்தர்பங்கள் நிறையவே உண்டு. இங்குள்ள வளங்களைப் பயன் படுத்தி தொழிலில் இடுபட்டால் பணிப்பெண்களாக வெளிநாடு செல்பவர்கள் அங்கு போக வேண்டிய அவசியம் கிடையாது.

எதிர் காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்கள் வெளிநாடு செல்வதை தடுப்பதற்காக மாற்றுத் தொழில் நடவடிக்கைகளை நாம் இந்த மாகாணத்தில் ஏற்படுத்த வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டதில் தமிழ் முஸ்லிம் என இரண்டு கிராமங்களைத் தெரிவு செய்து இனிவரும் நான்கு வருடத்தினுள் அந்தப் பிரதேசத்திலிருந்து எந்தவொரு பெண்ணும் வெளிநாடு செல்லக் கூடாது என்ற நிலையினை உருவாக்குவதே எனத நோக்கமாகும்.

இதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் கிராமத்தினை தெரிவு செய்துள்ளேன் அதேபோன்று இன்னுமொரு தமிழ் கிராமத்தினையும் தெரிவு செய்து அந்தப் பிரதேசத்தில் வறுமையிலுள்ள பெண்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த மாதமொன்றிற்கு பத்தாயிரம் ரூபா வருமானத்தினை ஏற்படுத்த வழிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றேன். எனத் தெரிவித்தார்.

Published by

Leave a comment