காத்தான்குடி: குழந்தைகள் எமது அமானிதமாகும். இதற்கு மறுமையில் பொறுப்புச் சொல்லியாக வேண்டும். இவ்விடயம் இன்று மிகக் கேள்விக் குறியாகியுள்ளது. இவ்வாறு காத்தான்குடி ஐம்இய்யத்துல் உலமா சபைச் செயலாளரும் காத்தான்குடி பிரதேச செயலக பட்டதாரிப் பயிலுனருமான மௌலவி எம்.எச்.எம்.ஜிப்ரிப்ரி (மதனி) தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்திப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மது பாவனையை தடுத்தல் சிறுவர் மற்றும் ஆத்மிக விழிப்புனர்வுக்கருத்தரங்கு ஹிஸ்புள்ளா மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
இன்று குழந்தைகள் வளர்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது .எந்த ஆங்கில பாடசாலையில் விடலாம் எந்த பாடசாலை உயர் தரத்தில்; கற்பிக்கப்படுகிறது என சிந்திக்கிறோம் இதில் தவறில்லை.; ஆனால் நாம் பிள்ளையின் ஒழுக்கத்தினை பற்றிச் சிந்திப்பதில் கவனக்குறைவாக நடந்துகொள்கிறோம் சிறு வயதிலேயே பெற்றோருக்கு ஏசுகின்றனர.; ஏன் எமது பிள்ளை எமது சொல் கேட்பதில்லையென நிறைய பெற்றோர்கள் அங்கலாயக்;கின்றனர் இதற்கான காரணத்தினை நோக்குவோமாயின் அப்பிள்ளைகள் கூடுகின்ற நன்பர்கள் கெட்ட நடத்தையுள்ளவர்களாக இருப்பர். இதனை நாங்கள் கண்காணிக்க கடமைப்பட்டுள்ளோம். நாங்களே எங்கள் பிள்ளை கெட்டுவிட காரணமாக அமைகிறோம்.
அண்மையில் போன் சொப் ஒன்றுக்கு சென்றிருந்தேன் அதன் உரிமையாளர் கூறிய விடயம் ஆச்சரியத்தை உண்டுபண்ணியது.
தாய் ஒருவர் தனது அன்பு மகனை போன் சொப்புக்கு அழைத்து வந்திருந்தார் தனது பிள்ளை 5ம் தர புலமைப்பரிசில் பாஸ் பண்ணிவிட்டான் என்பதற்காக உனக்கு என்ன போன் வேண்டுமோ அதை விரும்பியெடு எனக்கூறினாராம். அந்தப்பையன் டச் போன் வேண்டும் எனக்கூறினாராம் பரவாயில்லை அவன் கேட்பதைக்கொடுங்கள் எனக் கூறினாராம் இத்தாய். பின்னர் அந்தப்பையன் ஜி பி ஆர் எஸ் போட்டுத்தரச் சென்னானாம் அதற்கு அந்தக்கடை உரிமையாளர் இது இவருக்கு தேவையில்லை எனக்கூறியும் அத்தாய் விடாப்புடியாக அவன் கேட்பதைச் செய்துகொடுங்கள் எனக்கூறி அதைப் போட்டுக்கொடுத்தாராம்.
இதை வைத்து நாம் நோக்குகையில் அந்தச்சிறு பிள்ளைக்கு இவ்விடயம் தேவையா என கேட்க விரும்புகிறேன். அதில் நல்ல விடயங்களும் உள்ளன கெட்ட விடயங்களும் உள்ளன நாம்தான் பிள்ளைகளை வழி கெடுக்கத் தூண்டுகிறோம் என்பதற்கு இது நல்ல உதாரணமாகும்
அத்தடன் குழந்தை வயிற்றில் இருக்கும் போதே தாய் அதிகமாக குர்ஆன் ஓதக்கூடியவராகவும் அதிகமாக திக்ர் செய்யக் கூடியவராகவும் நல்ல பேச்சுக்களை பேசக்கூடியவராகவும் இருத்தல் வேண்டும் சிறு வயதிலிருந்தே இஸ்லாமிய அறிவுறைகளையும் நல்லொழுக்கங்களையும் கற்றுக்கொடுத்து இவ்வுலகிலும் மறுவுலகிலும் எமக்கு துஆச்செய்யக்கூடிய பிள்ளைகளை உருவாக்கவேண்டும் எனத்தெரிவித்தார்.
மேற்படி நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர்கள் மது ஒழிப்ப உத்தியோகத்தர்கள் சமுர்த்தி அபிருத்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி பயனாளிகளும் கலந்து சிறப்பித்தனர்.
![google-phone[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/12/google-phone1.jpg?w=83&h=120)
Leave a comment