கடை உணவுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைச்சு உத்தரவு

sri%20lanka%20street%20food[1]கொழும்பு: கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடும் அவதானம் செலுத்துமாறு சுகாதாரச்சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித்த மஹிபால சகல உணவு, மருத்துவப் பரிசோதகர்களைக் கேட்டுள்ளார்.

உணவுப் பாதுகாப்பு தொடர்பான உத்தேச வேலைத்திட்டம் பற்றி அவர் பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவன கேட்போர் கூடத்தில் மருந்துப் பரிசோதகர்க ளுக்கு விளக்கம் அளித்தார். அக்டோபர் 21 முதல் 27 வரை தேசிய உணவுப் பாதுகாப்பு வாரத்தைப் பிரகடனம் செய்யுமாறு சுகாதார அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அக்டோபர் 16 ஆம் திகதி உலக உணவு தினத்தை ஒட்டி இது பிரகடனம் செய்யப்படும்.உணவு விஷம் காரணமாக சீனா வில் 300 மில்லியன் பேரும், அமெரிக்காவில் 110 மில்லியன் பேரும் பலியாகின்றனர்.

இலங்கையிலும் கடந்த பல வருடங்களாக ஏராளமா னோர் உணவு விஷத்துக்கு பலியாகியுள்ளனர் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க உணவுச் சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.உணவுப் பாதுகாப்பு தொடர்பாக எடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இவ்வாறு டாக்டர் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார். Ga

Published by

Leave a comment