ஈரான் – இலங்கை ஜனாதிபதிகள் சந்திப்பு

He--Iran[1]நிவ்யோர்க்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று பிற்பகல் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரொஹானியை சந்தித்துரையாடினார். ஐக்கிய நாடுகள் சபையின் 68ஆவது அமர்வில் கலந்துக்கொள்ள நிவ்யோக்சென்றிருந்த இந்த இரு நாடுகளின் தலைவர்களும் இரு நாடுகளின் சினேகபூர்வ நட்புறவுகள் குறித்து கலந்துரையாடினர்.

இந்த நட்புறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் கலந்துரையாடினர்.எரிபொருள் தொடர்பாக ஈரான் இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி “நீங்கள் எமக்கு நல்கும் ஒத்துழைப்பை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம் எனக் குறிப்பிட்டார்.

சர்வதேச மேடைகளில் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  இங்கு நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

ஈரானின்  வதிவிட பிரதிநிதி மொஹமட் காஸி, ஈரான் ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் ஹிசைன் கெரெஸ்டொன், ஈரான் ஜனாதிபதி செயலக பிரதானி , வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நீர்ப்பாசன நீர் முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இளைஞர் அலுவல்கள், திறன் விருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும,

வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க இலங்கையின் வதிவிட பிரதி நிதிபாலித கொஹன ,வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ஷேனுகா செனவிரத்ன ஆகியோரும் இச்சந்திப்பில்  கலந்துகொண்டனர்.  Ga

Published by

Leave a comment