சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சினால் வறிய மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பி வழங்கும் நிகழ்வு

– பழுலுல்லாஹ் பர்ஹான்

kankeyanodai (4)காத்தான்குடி: பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கினங்க சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சினால் வறிய மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பி வழங்கும் திட்டத்தில் ஒரு தொகுதி வறிய மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பி வழங்கும் நிகழ்வு  வியாழக்கிழமை காங்கேயனோடை பிரதேசத்திலுள்ள இரண்டு பாடசாலைகளில் இடம்பெற்றது.

இதில் முதலாவது நிகழ்வு காங்கேயனோடை ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்திலும், இரண்டாவது நிகழ்வு காங்கேயனோடை அல் அக்ஷா வித்த்தியாலயத்திலும் இடம்பெற்ற போது இரண்டு பாடசாலைகளிலும் கல்வி பயிலும் வறிய மாணவ மாணவிகளுக்கு சவூதி அரேபிய நாட்டின் இஸ்லாமிய மத விவகார கலாசார சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சின் பிரதியமைச்சரும் அதன் பணிப்பாளர் நாயகமுமாகிய அஷ்ஷேய்க் அப்துல் கரீம் இப்றாஹீம் அல் றயீஸ், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ,சவூதி அரேபிய நாட்டின் சிறுபான்மை நாடுகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் அஷ்ஷெய்க் அஹமத் றூமி,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்; மத்திய கிழக்கு நாடுகளுக்கு பொறுப்பான ஆலோசகர் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா மற்றும் அதிதிகளினால் அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சினால் வறிய மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பி வழங்கி வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

kankeyanodai

kankeyanodai (2)

kankeyanodai (3)

kankeyanodai (4)

Published by

Leave a comment