காத்தான்குடி ஹலிபா அபூபக்கர் சித்தீக் (ரலியல்லாஹூ) வீதி மக்கள் பாவனைக்கு உத்தியோகபூர்வமாக கையளிப்பு

DSC00405பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் ஜெய்கா வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மானிக்கப்ட்ட காத்தான்குடி ஹலிபா அபூபக்கர் சித்தீக் (ரலியல்லாஹூ) வீதி மக்கள் பாவனைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இதன் போது மக்கள் பாவனைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட இவ்வீதியின் நாடாவையும் பெயர் பலகையையும் சவூதி அரேபிய நாட்டின் இஸ்லாமிய மத விவகார கலாசார சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சின் பிரதியமைச்சரும் அதன் பணிப்பாளர் நாயகமுமாகிய அஷ்ஷேய்க் அப்துல் கரீம் இப்றாஹீம் அல் றயீஸ், சவூதி அரேபிய நாட்டின் சிறுபான்மை நாடுகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் அஷ்ஷேய்க் அஹமத் றூமி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் வெட்டி திரை நீக்கம் செய்தனர்.

இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் பதில் தவிசாளர் ஜெஸீம், காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலய அதிபர் அல்லாப்பிச்சை, காத்தான்குடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஜவாஹிர் மதனி மற்றும் ஸ்ரீலங்கா ஹிறா பௌன்டேசன் நிறுவன பிரதிநிதிகள், ஊர் பிரமுகர்கள் புத்திஜீவிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment