காங்கேயனோடை அல்-அக்ஷா வித்தியாலயத்தில் ஆராதனை மண்டபத்தோடு கூடிய இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு

kankeyanodai– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காங்கேயனோடை பிரதேசத்தில் அமைந்துள்ள காங்கேயனோடை அல்-அக்ஷா வித்தியாலயத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 10 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ஆராதனை மண்டபத்தோடு கூடிய இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு அல்-அக்ஷா வித்தியாலய பாடசாலை அதிபர் எம்.ஐ.அப்பாஸ் நளீமி தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது ஆராதனை மண்டபத்தோடு கூடிய இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கிணங்க மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கு விஷேட விமானம் மூலம் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த சவூதி அரேபிய நாட்டின் இஸ்லாமிய மத விவகார கலாசார சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சின் பிரதியமைச்சரும் அதன் பணிப்பாளர் நாயகமுமாகிய அஷ்ஷேய்க் அப்துல் கரீம் இப்றாஹீம் அல் றயீஸ், சவூதி அரேபிய நாட்டின் சிறுபான்மை நாடுகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் அஷ்ஷேய்க் அஹமத் றூமி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்; மத்திய கிழக்கு நாடுகளுக்கு பொறுப்பான ஆலோசகர் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா, காத்தான்குடி நகர சபையின் பதில் தவிசாளர் ஜெஸீம் மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் ,ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சவூதி அரேபிய நாட்டு பிரமுகர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

kankeyanodai

kankeyanodai (2)

kankeyanodai (3)

kankeyanodai (4)

Published by

Leave a comment