கொழும்பு: கொழும்பு தேசிய ஆஸ்பத்திரி வெளிநோயாளர் பிரிவு சிற்றுண்டிச் சாலையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு வடையில் இரும்பு ஆணி ஒன்று இருக்கக் காணப்பட்டதாகப் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியின் கனிஷ்ட ஊழியர் ஒருவர் வடையை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டிருந்த வேளையில் ஏதோ இருப்பதை உணர்ந்து பார்த்த போது வடையில் ஆணி இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.
இதனை ஆஸ்பத்திரி ஊழியர் ஒருவர் சிற்றுண்டிச்சாலை ஊழியருக்குக் காண்பித்தபோது அந்த ஊழியர் அந்த வடையைப் பறித்துக் கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக தமக்கு எவ்வித முறைப்பாடும் கிடைக்கவில்லை என தேசிய ஆஸ்பத்திரிப் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்ஹ கூறியுள்ளார்.
– தினகரன்
Leave a comment