மத்திய அரசாங்கத்திடம் இருந்து கொண்டுவரக் கூடிய அனைத்தையும் செய்வதற்கான அளுத்தத்தின் குரலாக இம்மாகாண சபைக்குள் தான் செயற்படுவேன்: றிப்கான் பதியுதீன்

rifkhan– இர்ஷாத் றஹ்மத்துல்லா

மன்னார்: வடக்கில்அரசாங்கம் மக்களை அச்சுறுத்துவதாகவம், ஜனநாயகத்தை அம்மக்களுக்கு வழங்க மறுத்துவருவதாகவும் தெரிவித்து வந்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், அவர்களின் நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டு வந்த உதிரி கட்சிகளின் முகத்திரையினை தமிழ் மக்கள் அகற்றி காட்டியுள்ளதாக தெரிவித்துள்ள வடமாகாண சபைக்கு மன்னார் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள றிப்கான் பதியுதீன் வடக்கு மக்களுக்கு மத்திய அரசாங்கத்திடம் இருந்து கொண்டுவரக் கூடிய அனைத்தையும் செய்வதற்கான அளுத்தத்தின் குரலாக இம்மாகாண சபைக்குள் தான் செயற்படப் போவதாகவும் கூறியுள்ளார்.

தற்போதைய நிலவரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் றிப்கான் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளதாவது –

வடக்கில் அரசாங்கத்தினை தோற்கடித்து மக்களை மீண்டும் ஒரு அழிவுக்கு இட்டுச் செல்ல ஆணை வழங்மாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் கோஷங்களை எழுப்பின. இலங்கை நாடு என்பது பிரிக்கப்படாத ஒரே தேமாகும். இந்த நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பதை மறந்த நிலையில் இவர்களது பரப்புரைகளை் அமைந்திருந்தன. குறி்ப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசாங்கள் எல்லாம் எமது மக்களுக்கு அபிவிருத்தி வேண்டாம் என்ற கோஷங்களாக இருந்தன. அதற்காக இம்மக்கள் வாக்களிக்க   வேண்டும் என்று கேட்டனர். மன்னார் மாவட்டத்தில் வாழும் மக்களி்ல் 33 ஆயிரம் பேர் எமக்கு இந்த அரசாங்கத்தின் அபிவிருத்தி வேண்டாம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளனர்.

எனவே அவர்களுக்கு எந்த வித  உரிமையுமில்லை அபிவிருத்திகளை பற்றி பேசுவதற்கும், அரசாங்கம் இம்மாவட்டங்களுக்கு கொண்டுவரும் அபிவிருத்திகள் தங்களது பிரதேசங்களுக்கோ, தங்களுக்கோ கிடைக்கவில்லை என அறிக்கைகளை விடுவதற்கோ, இனவாத கருத்துக்களை பரப்புவதற்கோ என்பதை தெளிவாக சொல்லி வைக்க  விரும்புகின்றேன்.மதவாத சிந்தனையின் மூலம் எமது மாவட்ட மக்களுக்கு கிடைக்கவிருந்த பல்வேறு நன்மைகளை குழி தோண்டி புதைத்த பெருமைக்குரியவர்கள் இருப்பதை  இன்னும் சில தினங்களில் இம்மக்கள் நன்கு புரிந்துகொள்வார்கள்.

வடமாகாண சபை தேர்தல் முடிவடைந்த கையோடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தாக்குதல்கள்இமற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் ஆரம்பித்துள்ளதுடன், வடக்கையும், கிழக்கையும் இணைக்கப் போவதாகவும் அதற்கு இந்த மாகாண சபையில் தீர்மானங்களை கொண்டுவரப் போவதாகவும் தமிழ் தேசிய  கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். அது அவர்களது பகற்கனவாகும். இலங்கையின் கட்டடமைப்பு என்பது ஒன்பது மாகாணங்களை கொண்டதாகும்.அன்றைய சூழல் இது எட்டாக இருந்தது, பிற்பாடு ஜனாதிபதியின் முயற்சியால் 9 ஆக மாற்றம் கண்டுள்ளது.

வடமாகாண சபையின் அதிகாரங்களை தாங்கள் கைப்பற்றியதால் முழு இலங்கையின் ஆட்சியும் தம்வசம் ஆனதாக கற்பனை செய்து, அரசாங்கத்திற்கு வாக்களித்த தமிழ், முஸ்லிம் மக்களை அச்சுறுத்தும் பணிகளில் சிலர் ஈடுபட்டுவருகின்றனர். இவர்கள் இந்த செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.எம்மை பொறுத்த வரையில் நாங்கள் ஜனநாயகத்தை விரும்புவர்கள்இசகோதரத்துடன் செயற்படுபவர்கள், இனவாதம், மதவாதம் என்பவைகள் கடந்து மக்கள் தேவையறிந்து செயற்படுபவர்கள்.

எமது கட்சியின் தேசிய தலைவர்  அமைச்சர் றிசாத் பதயுதீன் அவர்களின் வழிகாட்டலில் அரசியல் மற்றும் அபிவிருத்திகளை முன்னெடுத்துச் செல்பவர்கள் என தெரிவித்த றிப்கான் பதியுதீன் எமது கட்சியின் தேசிய தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் மீதும், எம்மீதும் நம்பிக்கைவைத்து வாக்களித்த அனைத்து முஸ்லிம், தமிழ், மற்றும் சிங்கள மக்களுக்கான அபிவிருத்தி பணிகள் தொடரும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

rifkhan
றிப்கான் பதியுதீன்

Published by

Leave a comment