திவிதுர தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞான கணணி, மற்றும் மனையியல்கூட கட்டட திறப்பு நிகழ்வு

– ஏ.எல்.எம்.தாஹிர்

IMG_1025[1]வெலிவிட்டிய: வெலிவிட்டிய திவிதுர கல்விவலயத்தில் உள்ள திவிதுர தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞான கணணி, மற்றும் மனையியல் கூடம் அடங்களான கட்டிடத் தொகுதியினை மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கும் வைபவம் மீள்குடியேற்ற அமைச்சர் எம்.எச்.குணரத்ன வீரகோன் தலைமையில் நடைபெற்றது.

பிரதேசத்தில் முக்கிய பாடசாலைகளில் ஒன்றான இதில் முதலாம்தரம் முதல் சாதாரணதரம் வரை சுமார் 400 மாணவர்களுக்கு மேல் கல்வி பயில்கின்றனர். இப்புதிய கட்டிட நிர்மானப் பணிகளுக்காக 3.5 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அத்துடன் பாடசாலை பேண்ட் வாத்திய குழுவினருக்காக 50 ஆயிரம் ரூபாய் பெருமதியான பேண்ட் வாத்திய கருவிகளும் இவ்வைபவத்தின் போது அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டன.

இப்பாடசாலைக்கு கிடைக்கப்பெற்ற இவ்வளங்களானது மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் பாரிய பங்களிப்புச் செய்யும் என்பதுடன் இந்த வசதியை மாணவர்கள் உரிய முறையில் பயன்படுத்தி கல்வித்துறையில் முன்னேற்றமடைய வேண்டுமென இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் குணரத்ன வீரகோன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தென்மாகாண கல்வியமைச்சர் சந்திமா ராசபுத்திர, மாகாண சபை உறுப்பினர் லசந்த விஜயநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

IMG_1025[1]

IMG_1099[1]

Published by

Leave a comment