தேர்தல் முடிவுகள் பதிவேற்றம்: வாசகர்களுக்கு நன்றிகள்

Thank-You[1]காத்தான்குடி: நேற்று சனிக்கிழமை (21-09-2013) இடம்பெற்ற வடக்கு, மத்திய மற்றும் வடடேல் மாகாணசபைகளுக்கான தேர்தல்களின் முடிவுகளை நேற்றிரவிலிருந்து உடனுக்குடன் பதிவேற்றி வந்தோம். தேர்தல் முடிவுகளுடன் எம்மோடு இணைந்திருந்த உள்ளுர் மற்றும் கடல்கடந்த பல்லாயிரம் வாசகர்களுக்கும்  எமது மனமார்ந்த நன்றிகள்.

வட மாகாணசபை இலங்கை தமிழரசுக் கட்சிக்கும், ஏனைய இரு மாகாணசபைகளும் ஐ.ம.சு.கூ இற்கும் ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் உருவாகி இருக்கின்றன. ஓர் சிறுபான்மை சமூகத்தின் ஒற்றுமைக்குக் கிடைத்த ஓர் பாரிய சரித்திர வெற்றியா இம்முறைக்கான வடமாகாணசபையின் இலங்கை தமிழரசுக் கட்சியின் வெற்றி இலங்கையில் மாத்திரமல்ல உலகளவில் பிரபல்யமடைந்திருப்பதுடன், ஐ.நாடுகளின் கவனத்தையும் திசைதிருப்பி இருப்பதை இந்நேரத்தில் நினைவுகூற கடமைப்பட்டுள்ளோம்.

இலங்கையைப் பொருத்தமட்டில் தனக்கான ஓர் ஆட்சியை அமைத்துக்கொள்ள சிந்திக்க வேண்டிய சமூகமாக முஸ்லிம் சமூகம் மாத்திரமே இன்னும் இருந்துவருவதையும் இந்நேரத்தில் தெரிவித்துக்கொண்டு, இத்தேர்தலில் வெற்றிபெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி

– இயக்குனர்

Published by

Leave a comment