சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கான விசேட விழிப்புணர்வுக் கூட்டம்

20130922_105218பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 05 பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கான விசேட விழிப்புணர்வுக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன தலைமையில் நடைபெற்றது.

பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பேராசிரியர் ரஜீவ வீரசிங்க,கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மெவன் சில்வா,மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஹக்மன பண்டார,மட்டக்களப்பு,காத்தான்குடி,கொக்கட்டிச்சோலை, களுவாஞ்சிகுடி,வெல்லாவளி ஆகிய 05 பிரதேச பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள்,குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த சிவில் பாதுகாப்புக் குழுத் தலைவர்கள்,அதன் அதிகாரிகள்,உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது குற்றங்கள் ஏற்பட முன் அவற்றைத் தடுப்பது,சிவில் பாதுகாப்புக் குழுக்களின் ஊடாக செய்யப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள்,சிவில் பாதுகாப்புக் குழுத் தலைவர்கள் செயற்பட வேண்டிய விதம் என்பன குறித்து தெளிவுபடுத்தப்பட்டது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment