நைரோபி: கென்யாவில்வர்த்தக தொடர் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் பலியாகினர். கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள வர்த்தக தொடருக்குள் நேற்று துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் புகுந்து அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் 40பேர் பலியாகினர். 150 பேர் காயம் அடைந்தனர்.
சோமாலியா விவகாரத்தில் கென்ய ராணுவம் தலையிடுவதற்கு பதில் அடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சோமாலியாவில் செயல்படும் அல் கொய்தா அமைப்பின் கூட்டாளியான ஷெபாப் போராளிகள் தெரிவித்துள்ளனர்.
சோமாலியாவில் ஆபிரிக்க ராணுவம் இஸ்லாமிய போராளிகளுக்கு எதிராக போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a comment