மிஸ்வாக் பாவனைக்கு இஸ்லாம் கூறும் வரைவிலக்கணம் (A Small Stick Used for Cleaning and polishing The Teeth) பற்களைத் துப்பரவு செய்து அவற்றை அழகுபடுத்தப் பயன்படும் சிறிய குச்சிக்கு மிஸ்வாக் என்று சொல்லப்படும்’. அறிஞர் பெருமக்களில் ஒரு சாரார் கூறுகின்றனர் பற்களில் உள்ள மஞ்சற்கறைகள் நீங்குவதற்காக பற்களைக் குச்சிகளை கொண்டு துப்பரவு செய்வதற்கு மிஸ்வாக் என்று சொல்லப்படும் (ஷரஹ் முஸ்லிம் ஃ நைலுல் அவ்தார்)
மிஸ்வாக் கொண்டு பற்களைக் கொண்டு துப்பரவு செய்யும் அதே வேளை நவீன பல் வைத்தியத் துறையும் பல புதிய முறைகளை அறிமுகம் செய்கின்றது.
பற்களுக்கிடையே உள்ள இடைவெளியை சுத்தப்படுத்தல்
இது ஒவ்வொரு தனி நபரிலும் தங்கியுள்ளது. பற்கள் நெருக்கமாக அடுக்கப்பட்டுள்ள சாதாரண முரசைக் கொண்டுள்ளவர்களுக்கு பின்வரும் முறைகளில் ஒன்றை பயன்படுத்தி பற்களையும் வாயையும் சுத்தப்படுத்த முடியும்.
1. Dental Floss – இது ஒரு வகையான நூல் போன்ற அமைப்பக் கொண்டது.இதை பாவித்து பற்களுக்கு இடையே உள்ள pடயஙரந (மென்படிவம்) நீக்க முடியும். பாவனைக்கு இலகுவாக “Floss” Tap நூல் வடிவிலும் கை பிடியுடன் கூடிய நூல் வடிவிலும் உள்ளது. இதனை விரல்களைக் கொண்டும் பாவிக்க முடியும்.
2. Tooth Picks / Stim-U-Dents பற்குச்சிகள் – இது பற்களுக்கிடையில் இடைவெளி சற்று அதிகம் உள்ளவர்களுக்கு பொருந்தும். இதற்கென வடிவமைக்கப்பட்ட பல குச்சிகள் காணப்படுகின்றன. அவற்றை பற்களுக்கிடையே செலுத்தி பற்களை சுத்தம் செய்ய முடியும். மாறாக கண்ட கண்ட ஈர்க்குகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
3. Inter Dental Brushes – இது பற்களுக்கு இடையே அதிக இடைவெளி உள்ளவர்களுக்கென விஷேடமான முறையில் வடிவமைக்கப்பட்ட பற்தூரிகை போன்ற ஒன்றாகும். இதனை பற்களுக்கு இடைய முன்பின்னாக செலுத்துவதன் மூலம் சுத்தம் செய்ய முடியும்.
4. Electric Tooth Brush – நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட தன்னிச்சையாக இயங்கும் பற்தூரிகைகளாகும். இவை பொதுவாக கை அங்கவீனமுற்றவர்களுக்கும், செயற்றிறன் அற்ற வேறு வகை நோயாளிகளும் தமது பற்களை சுத்தப்படுத்தப் பயன்படும் நவீன சாதனமாகும்.
5. Mouth Washes வாய் கழுவும் திரவியங்கள் – பல் வேறுபட்ட பெயர்களில் பல ஆழரவா றுயளாநள சந்தையில் காணப்படுகின்றன. இவை 0.2ம% செறிவாக் கொண்ட Mouth Washes எனப்படும் நுண்ணங்கிகளுக்கு எதிராகச் செயற்படும் பதார்தாத்தை கொண்டுள்ளது. இருந்தாலும் இவை நீண்ட காலப் பாவனையில் சில தகாத விளைவுகளை வாயில் ஏற்படுத்தக்கூடும்.
6. Tongue Scrapers – இது நாவின் மேற்பாகத்தில் காணப்படும் நுண்ணங்கிகளின் படிவையும் வேறு சில படிவுகளையும் நீக்கப் பயன்படுவதுடன் வாயில் உருவாகும் துர்வாடையையும் இல்லாமல் ஆகுகின்றது.
இவ்வாறு நவீன பல் வைத்தியத் துறையில் முன்வைக்கப்பட்ட புதிய சாதனங்கள் அனைத்தினதும் தொழிற்பாட்டை ஒட்டு மொத்தமாக மிஸ்வாக் உள்ளடக்கியுள்ளது என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.
(தொடரும்….)
தொகுப்பு – உம்மு ஷைமா அஸ்ஸாலிஹாத்







Leave a comment