வட மாகாணசபைத் தேர்தலில் அரசு தோல்வி?

provinceயாழ்ப்பாணம்: நடைபெற்று முடிந்த 3 மாகாணசபைகளினதும் தபால் மூலமான வாக்களிப்பு முடிவுகள் தற்பொழுது வெளியாகிவரும் நிலையில், நேற்று மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.  தபால்மூலமான வாக்களிப்பு முடிவுகளின்படி வடமாகாணசபைத் தேர்தலில் அரசாங்கம் தோல்வியைத் தழுவி இருக்கின்றது.

வடமாகாணத்தின் மொத்த வாக்குகள் தற்பொழுது எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஆளும் கட்சி இரண்டாம் இடத்தில் இருந்தாலும் முதலாம் இடத்தைப் பெற்றுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி பெற்றுள்ள வாக்குகளுக்கும், ஐ.மசு.மு  அரசாங்கத்திற்கும் இடையில் பாரிய விகிதாசாரம் நிலவுவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published by

Leave a comment