கொழும்பில் ஜப்பானிய கல்வி கருத்தரங்கு

japanகொழும்பு: 2013ஆம் ஆண்டுக்கான ஜப்பானிய கல்வி கருத்தரங்கு கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த கருத்தரங்கு நாளை   21ஆம் திகதி சனிக்கிழமை காலை பத்து மணி முதல் மாலை நான்கு கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெறவுள்ளது. ஜப்பானிய பல்கலைக்கழகங்களில் கற்க விரும்பும் மாணவர்களுக்கு உதவுவதற்காகவே இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை ஜப்பானிய பட்டதாரிகள் சங்கம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு மையம் ஆகியவற்றின் உதவியுடன் கொழும்பிலுள்ள ஜப்பானி தூதுவராலயத்தினால் இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கருத்தரங்கில் பங்குபற்ற கட்டணம் எதுவும் அறவிடப்படமாட்டாது. ஜப்பானிலுள்ள ஏழு பிரபல பல்கலைக்கழகங்கள் இந்த கருத்தரங்கில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. GA

Published by

Leave a comment