ஒட்டுச் சுட்டான் பலசந்தை கட்டடத்தக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

ottusuttan– இர்ஷாத் றஹ்மத்துல்லா

முல்லைத்தீவு: நீண்டகால தேவையாக  இருந்துவந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுச் சுட்டான் பலசந்தை கட்டடத்தக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று மாலை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்கினால் நட்டி வைக்கப்பட்டது.

வன்னி மாவட்ட அபிவருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்திருந்தார்

தற்போது முல்லை மாவட்டம் அபிவிருத்தியினை நோக்கி பயணிப்பதாகவும், அந்த பயணித்தில் மக்களையும் இணைந்து கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் பாருக் அங்கிருந்த மக்களிடம் கேட்டுக் கொண்டார். இது போன்ற அபிவிருத்திகளை மக்களுக்காக நாங்கள் அரசாங்கத்திடம் இருந்து கொண்டுவருவது உறுதியென்றும் கூறினார்.

ottusuttan

Published by

Leave a comment