ஓய்ந்து போயின
சண்டை மேடைகள்
சாக்கடை அரசியலுக்கு
சல்லடையாகிப் போகின
தனிமனிதனின் கௌரவங்கள்.
தான் தங்கம்
தன் கட்சிதான்
சிங்கம் என்று
கர்ஜித்த
துடைப்பாண்கள்
தங்களைத் துடைக்க
மறந்து
மூலையில் சாய்ந்துவிட்டனர்.
தன் பாவத்திற்காய் வருந்த வேண்டிய நேரத்தில்
அச்சத்தால்
தன் தலைவனின்
வெற்றிக்காய்
பிரார்த்திக்கும் நேரம் இது..
தன் கதிரைக்காய் சிந்திக்கும் நேரமும் இது…
தன் இரட்சகனை விடவும்
தன் கட்சித் தலைவனை
சிரம்பணியக்கூட
அஞ்சாத அடியார்கள்.
பேரினவாதமும்
போர் மேகங்களும்
விலைவாசி உயர்வுகளும்,
ஆட்கடத்தல்களும்,
கற்பழிப்புக்களும்
செவ்வனே அரங்கேரும்
இலங்கை மண்ணுக்கு
தங்களை அர்ப்பணித்துவரும்
வாக்காளர்கள் மீண்டும்
முட்டாள்கள் என்பதை
மீண்டும் தீர்மானிக்கும்
நாள்….
நாளைய தினம்.
இல்லை….
நாங்கள் முட்டாள்களில்லை!
எங்கள் வாக்குரிமையை
வாய்மைக்காய் விலைபேசுவோம்
உரிமைக்காய்
சிந்தித்து புள்ளடி இடுவோம்.
![ballot_box1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/ballot_box11.jpg?w=150&h=112)
Leave a comment