கிரிக்கட் விளையாட்டில் உள்ள பத்து களத்தடுப்பு நிலைகளில் நான்காவது நிலை, பொயிண்ட் நிலை எனப்படும். இந்நிலை பெக்வார்ட் (Bacward Point), சில்லி பொய்ண்ட் (Silly Point) என அழைக்கப்படும். பெக்வார்ட் பொய்ண்ட், கலி (Gully) மற்றும் கவர் (Cover) பொய்ண்ட் ஆகிய 3வதும் 5வதும் களத்தடுப்பு நிலைக்கு இடைப்பட்ட இடமாகும்.
பெக்வார்ட் பொயிண்ட் 30 யார் உள்ளவட்டத்துக்குள் அமையும். இந்நிலை ஆபத்து குறைந்தது.
சில்லி பொய்ண்ட் எனப்படுவது இதே பொய்ண்ட் நேர் கோட்டு நிலையைக் கொண்டமையும். எனினும் துடுப்பாட்ட வீரருக்கும் சில்லி பொய்ண்ட் களத்தடுப்பு வீரருக்கும் இடையில் ஆகக்கூடிய தூரமாக 2 யார்களே அமைந்திருக்கும்.
கூடுதலாக ஓர் டெஸ்ட் போட்டியில் இந்த சில்லி களத்தடுப்பு இன்றியமையாதது. குறிப்பாக சுழல்பந்து வீச்சாளர்களின் பந்துகள் மட்டையிலும், கால்தடுப்பிலும் பட்டு இழகுவாக குறித்த துடுப்பாட்ட வீரரை ஆட்மிழக்க அல்லது மத்தியஸ்தரை ஏமாற்றி போலியான ஆட்மிழப்பை வற்புறுத்திப்பெற இந்த சில்லி பொய்ண்ட் அமையும்.
ஓரு நாள் போட்டிகளிலும் விக்கட்டுக்கள் விரைவாக சரியுமிடத்து, பிந்திவரும் துடுப்பாட்ட வீரர்களின் நிதானமான ஆட்டத்தை தடுப்பதற்கும் இந்த சில்லி பொய்ண்ட் அமைகின்றது.
சில்லி (Silly) ஆங்கிலத்தில் அறிவற்ற, மடத்தனமான போன்ற பொருட்களைத் தருகின்றன. ஓர் துடுப்பாட்ட வீரருக்கு மிக அருகில் காணப்படும் இந்த சில்லி பொய்ண்ட் உயிராபத்தை ஏற்படுத்தும். எந்நேரத்திலும் ஓங்கி அடிக்கும் பந்து குறித்த சில்லி களத்தடுப்பு வீரின் உடலை பதம் பார்க்கும். அதுமாத்திரமன்றி, துடுப்பாட்ட வீரரின் மட்டை கைநழுவிப் போனாலும் முதலில் தாக்கப்படுவது இந்த சில்லி களத்தடுப்பாளரே.
எனவேதான் உயிரை அர்ப்பணிக்கும் இக்களத்தடுப்பை சில்லி மடத்தனமான, அறிவற்ற நிலை என கிரிக்கட் களத்தடுப்பு நிலை கூறுகிறது.
‘எவனாவது இந்த இடத்தில் பீல்டிங் நிற்பானா, மடையன்தான் நிற்பான்’. என்று நாங்கள் சொல்லிக்கொள்வது போல்தான், கிரிக்கட் அகராதியும் கூறுகிறது.
குறிப்பாக சில்லி பொய்ண்டிற்கு சிறந்த துடுப்பாட்ட வீரர்களே நிறுத்தப்படுவது வழமை. பந்து வீச்சாளர்கள் அவர்களது உடல் நிலை எந்நேரமும் வோர்ம் அப் இல் இருக்க வேண்டும் என்பதற்காக தேர்ட் மேன் (Third Man), பைன் லெக் (Fine Leg) திசைகளில் நிறுத்தப்படுவது வழக்கம். இவ்விடங்களில் அதிகமாக பந்து வருவதாலும், பந்துகளை ஓடிச் சென்று பெரும் நிலை காணப்படுவதாலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் இவ்விடங்களுக்கு அனுப்பப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
![3760194-3x2-940x627[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/3760194-3x2-940x6271.jpg?w=150&h=100)
![3760194-3x2-940x627[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/3760194-3x2-940x6271.jpg?w=624&h=416)
![img_5449[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/img_54491.jpg?w=624&h=390)
Leave a comment