– முகம்மட் பயாஸ் – ஊடகப் பிரிவு
காத்தான்குடி: காத்தான்குடியில் புவியினை பிரதம ஆசிரியராக கொண்டு வெளிவரும் வார உரைகல் பத்திரிகையில் கடந்த வாரம் வெளியாகிய ‘பேசியதை பேசவில்லை என பெய்யுரைத்த’ எனும் தலைப்பில் வெளியாகிய செய்தி ஒன்றிற்கு காத்தான்குடி மீடியா ப்ரசன்ட அதன் முகாமையாளர் முகம்மட் சஜியினை தொடர்புபடுத்தி வெளியாகிய செய்தி ஒன்றிற்கு காத்தான்குடி மீடியா ப்ரசன்ட் அதன் கண்டன அறிக்கையினை ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டதுடன் அதன் பிரதி ஒன்றினையும் வார உரைகல் பத்திரிகையின் உத்தியோக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்திருந்தது.
காத்தான்குடி மீடியா ப்ரசன்ட் அனுப்பி வைத்த அறிக்கையில் ‘மனங்களுக்கிடையில் குழப்பத்தையும் ஊடக தர்மத்தினையும் தொடர்பில்லாத ஒருவரை செய்தியில் தொடர்புபடுத்தி செய்தி வெளியிடுவதில் சற்று அவதானம் செலுத்தி உறுதிப்படுத்தியபின் வெளியிடுமாறுமே அதில் குறிப்பிடப்பட்டிருந்து.
அவ்ஊடக அறிக்கைக்கு பதில் 18.09.2013 இன்று வெளியாகிய பத்திரிகையில் நாம் வெளியிட்ட கண்டன அறிக்கை எதுவோ அதற்கு எவ்வித தொடர்பும் சம்பந்தமும் இல்லாத பதில் ஒன்றை வேடிக்கையாக வெளியிட்டிருப்பதை கண்டு ஒரு பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவோ அல்லது அதை நடாத்துவதற்கு எந்தவித தகுதியும் இல்லாதவர் என்பதை அவர் இன்று வெளியிட்ட அவரது மறுப்பரிக்கை வாயிலாக தெரிகிறது.
எமது காத்தான்குடி மீடியா ப்ரசன்ட்டின் முகாமையாளர் சஜியினை வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக தன்னை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி கொள்ளும் ஊடக நண்பர் புவி அவர்கள் எமது மீடியா ப்ரசன்ட்டின் முகாமையாளர் சஜியினை வித்தை காட்டும் ஊடகத்தொழிலாளி எனவும் கோமாளி எனவும் அறிவுத்திறன் அற்றவர் எனவும் சமீபத்தில் அவர் விபத்துக்குள்ளாகிய விடயத்தினை இழிவுபடுத்தியும் வெளியிட்ட அவரது இன்றைய அறிக்கையினை காத்தான்குடி மீடியா ப்ரசன்ட் மீண்டும் வண்மையாக கண்டிக்கிறது.
அவர் ஒரு பக்கச்சார்பற்ற பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருப்பதாக இருந்தால் காத்தான்குடி மீடியா பிரசன்ட்டின் கண்டண அறிக்கையினை பிரசுரித்து இருப்பீர்கள் இதை விட்டு விட்டு எமது மீடியா ப்ரசன்டின் முகாமையாளரை மிக கேவலமாக தங்களுடைய வாசகர்களுக்கு இச்செய்தியை வெளியிட்டு இருப்பதையிட்டு எமது மீடியாப்ரசன்ட் மிகவும் கவலையை தெரிவித்துக் கொள்கிறது.
இது தொடர்பாக எமது ப்ரசன்ட்டின் முகாமையாளர் சஜியினை தொடர்புகொண்டு கேட்டபோது ‘இன்று வெளியாகிய பத்திரிகையின் செய்தியினை எனது ஊடக நண்பர் முகம்மட் றிபாஸ் மூலமாக தொலைபேசியில் அறிய முடிந்தது.
அதனை அடுத்து வார உரைகல் பத்திரிகையினை என்னால் பார்க்க முடிந்தது. எனத ஊடக நண்பர் சகோதரர் புவி அவர்கள் இன்னுமொறு ஊடக நண்பரை எந்த அளவு விமர்சிப்பார் என்பதை என்னை விமர்சித்தார் என்பதில் இருந்து அறிய முடிந்தது. அவரது இவ்வாறான மனதை கலங்க வைக்கும் வார்த்தைகளைப் பார்த்து நான் மிகவும் கவலையடைந்தேன். எனது ஊடகப் பிரவேசத்திற்கு ஆரம்ப காலத்தில் உதவியாக இருந்த ஒரு சகோதரர் இந்த அளவு கேவலமாக விமர்சிப்பார் என்பதை நான் ஒரு போதும் எதிர்பார்த்தது கிடையாது.
ஆகவே அவர் பக்கச்சார்பானவர் என்று பலரும் வெளியில் பேசிக்கொன்டாலும் அவர் நாம் வழங்கிய அறிக்கையையும் அவர் வழங்கும் பதில் அறிக்கையையும் நாம் ஏற்கனவே வழங்கிய ஊடக அறிக்கையையும் அடுத்த வாரம் வெளியாகும் அவரது பத்திரிகையில் பிரசுரித்து மக்களுக்கு போதிய தெளிவினை கொடுக்காத வரை அவர் ஒரு பக்கச்சார்பானவர் என்பதை நான் தெரிந்து கொள்கின்றேன் எனவும் மீடியா ப்ரசன்டின் முகாமையாளரும் ஊடகவியலாளரும் பிரதியமைச்சரின் ஊடக செயலாளருமான முகம்மட் சஜி தெரிவித்தார்.
எனவே பிரதம ஆசிரியர் புவி றஹ்மதுல்லாஹ்வின் கவனத்திற்கு…..
இனியாவது அவரது பத்திரிகையில் சம்பந்தமில்லாதவர்களை தொடர்புபடுத்துவதையும் சம்பந்தமில்லாத பதிலறிக்கை விடுவதையும் நிறுத்திக் கொள்ளாதவரை எமது காத்தான்குடி மீடியா ப்ரசன்ட் தொடர்ந்தும் குரல் கொடுக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாது.
இவ்வறிக்கை சகல ஊடகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
Leave a comment