ஊடகவியலாளர்கள் இனம்,மதம்,மொழி,பிராந்தியம் என்பவற்றிற்கு அப்பால் பக்கச்சார்பில்லாமல் நடுநிலையாக செயற்படல் வேண்டும்-வி.சு.கருணாநிதி

vs karunanithi– பழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: ஊடகவியலாளர்கள் என்போர் இனம்,மதம்,மொழி,பிராந்தியம் என்பவற்றிற்கு அப்பால் பக்கச்சார்பில்லாமல் நடுநிலையாக செயற்படல் வேண்டும் என தினகரன் வாரமஞ்சரி பிரதி ஆசிரியர் வி.சு.கருணாநிதி தெரிவித்தார். ‘மாவட்ட அபிவிருத்தியில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்களிப்பு’ எனும் தலைப்பில் ‘மாவட்ட அபிவிருத்தியில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்களிப்பு’ எனும் தொனிப்பொருளில் அரசாங்க தகவல் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் விரிவுரை நிகழ்த்திய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர் எப்பொழுதும் மக்களோடு இருக்க வேண்டும்.

அபிவிருத்தி என்று வரும் போது அங்கே கட்டாயம் ஐந்து விடயங்கள் வர வேண்டும்.

உணவு,உடை,உறையுள் ,வருமானம் தொழில்,உட்கட்டமைப்பு, பாதுகாப்பு,சுகாதாரம் உரிமைகள் சமத்துவம் ,சுற்றாடல் உள்ளிட்ட விடயங்கள் அபிவிருத்தியில் காணப்படல் வேண்டும்.

அவைகள் ஐந்தும் பூர்த்தியாக பெறப்படும் போது பூரண அபிவிருத்தி நிச்சயம் கிடைக்கும்.

ஊடகத்தில் ஒரு செய்தியை எழுதும் போது நீங்கள் எவ்வித பாரபட்சமுமின்றி நீங்கள் அதை எழுத வேண்டும்.

அபிவிருத்திகள் தொடர்பாக செய்திகள் என்பவற்றை விட கட்டுரைகள்,நேர்காணல்கள்,செவ்விகள் உள்ளிட்ட அம்சங்களில் கூடுதலாக ஈடுபட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

vs karunanithi

Published by

Leave a comment