கொழும்பு: அமெரிக்க வொஷிங்டன் கடற்படை தளமொன்றில் ஆரன் அலக்சிஸ் (34) மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலில் 13 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றுன. பௌத்தரான அலக்சிஸ் அமெரிக்க படைப்பிரிவில் கடமையாற்றியவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதலுக்கான காரணம் எதுவென தெளிவாக குறிப்பிடப்படாத போதும் பல கேள்விகளை இத்தாக்குதல் சம்பவம் எழுப்பியுள்ளது. குறிப்பாக மியன்மாரை மையமாக கொண்டு மேலெழுந்துள்ள பௌத்த அடிப்படைவாத சிந்தணைகள் இன்று பௌத்த பயங்கரவாதம் என்று பேசப்படும் அளவுக்கு உலகலாவிய ரீதியில் வியாபிப்பது பௌத்தம் தொடர்பான தப்பபிப்பிராயங்களுக்கு வழிவகுக்கின்றன. குறிப்பாக உலக பயங்கரவாத மதங்களின் பட்டியலில் பௌத்தத்தை மேற்கு உள்ளடக்கியிருப்பதும், பௌத்த பயங்கரவாதம் என்ற தொணியில் டைம்ஸ் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் அன்மைக்காலமாக கருத்துக்களை முன்வைப்பதும் இத்தகைய தாக்குதல்களுக்கான காரணங்களில் ஒன்றாக இருக்க முடியும் என கருதப்படுகின்றது.
சாத்வீகம் என்ற அடிப்படையிலிருந்தும் தடம்மாறிச்செல்லும் பௌத்த அடிப்படிவாத சிந்தணைகள் முதலாளித்துவ பௌhத்தம் என்ற நவீன சிந்தணையின்பாலான உலக கவனயீர்ப்பை இத்தகைய மிலேச்சத்தனமான வன்முறைகள் நோக்கமாய் கொண்டிருக்க முடியும் என சில அவதாணிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
வழமை போன்று இம்முறையும் இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து செய்திகள் முன்வைக்கப்படாமை ஆச்சரியத்துக்குறியதே. இலங்கை அரசின் மீது அமெரிக்க கொண்டுள்ள குரோதங்களுக்கு பதிலடியாகவே இத்தாக்குதல் அமெரிக்க இதயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சொல்லிவிடுவதும் பொருத்தமற்றதே.
தனிப்பட்ட மனிதர்களினால் மேற்கொள்ளப்படும் இத்தகைய வன்முறைச்சம்பவங்களுடன் ஒரு மதத்தை வம்பிற்கு இழுப்பதோ, அல்லது மதத்தின் பெயரால் மேற்கொள்ளப்படும் காட்டுமிராண்டி சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து அங்கீகாரம் வழங்குவதோ சானக்கியமான தீர்வாக மாட்டாது.
அதே போன்று பௌத்தத்தின் பெயரால் மேற்கொள்ளப்படும் வன்முறைகளுக்கு பெரும்பான்மை பௌத்த மக்கள் தமது எதிரலைகளை வெளிப்படுத்தி உலக சமாதானத்திற்கு வழிகோலவேண்டிய தார்மீக பொருப்பும் உள்ளது.

Leave a comment