தொண்டமானாற்று: தொண்டமானாற்று பாலம் நிர்மாணிக்கப்பட்டது போன்று மக்களுக்கான பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களையும் அரசு சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொண்டமானாறு பாலத்தை இன்றைய தினம் (17) மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது மக்களுடைய நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்த தொண்டமானாற்று பாலம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
யுத்தகாலத்தின் போது சேதமடைந்த இப்பாலத்தின் ஊடாக மக்கள் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் படைத்தரப்பினரால் தற்காலிகமாக பாலமொன்று அமைக்கப்பட்டிருந்தது.
இன்று எமது கோரிக்கைக்கு அமைவாக அரசு மேற்கொண்ட பெருமுயற்சியின் பயனாக இப்பாலம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், ஜனாதிபதி அவர்களுக்கும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் நிர்மல கொத்தலாவலவுக்கும் எமது மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொண்டமானாற்று பாலத்தை போன்று மேலும் பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களை அரசு முன்னெடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் அவர்கள் மக்களுக்கு பல தேவைகள் இருக்கின்ற நிலையில் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்வதனூடாக மேலும் பல்வேறு பயன்களை பெற்றுக் கொள்ள முடியுமென்றும் சுட்டிக்காட்டினார்.
முன்பதாக நினைவுக்கல் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து நிர்மாணிக்கப்பட்ட புதியபாலத்தை அமைச்சர் கொத்தலாவல நாடாவை வெட்டி திறந்து வைத்து மக்கள் பாவனைக்கு கையளித்த அதேவேளை, நிர்மாணப்பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சகிதம் பார்வையிட்டு துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி கேட்டறிந்து கொண்டனர்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமைவாக 120 மீற்றர் நீளமும் 10 மீற்றர் அகலமும் கொண்டதாக அமையப்பெற்றுள்ள இப்பாலம் 200 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, இலங்கைக்கான யுனொப்ஸ் பிரதிநிதி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளர் ஏக்கநாயக்க, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண திட்டப்பணிப்பாளர் மோசஸ் மரியதாசன் மற்றும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் யாழ்ப்பாண பிரதம பொறியியலாளர் சுதாகரன் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் உடனிருந்தனர்.
![thonda03[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/thonda031.jpg?w=150&h=89)
![thonda03[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/thonda031.jpg?w=640&h=383)
![thonda04[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/thonda041.jpg?w=640&h=448)
![thonda10[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/thonda101.jpg?w=640&h=319)
![thonda16[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/thonda161.gif?w=640&h=425)
Leave a comment